10 ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களின் நகலினை இன்று ( 13 – 06 – 2025 ) முதல் பதிவிறக்கம் செய்யலாம் : தேர்வுத்துறை
மார்ச் /ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று 13 – 6 -2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் 17 – 6 – 2025 செவ்வாய்கிழமை வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Notification – ஐ Click செய்தவுடன் ” SSLC , March/April 2025 – Scripts Download” என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க
விரும்பினால் இதே இணையதள முகவரியில் ” Application for Retotalling /Revaluation என்ற தலைப்பினை Click செய்து வெற்று விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் இவ் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 16 – 6 – 2025 திங்கட்கிழமை காலை 11:00 மணி முதல் 18 – 6 – 2025 புதன்கிழமை மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுக்கூட்டில் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக முகவரியை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் press Release என்பதை Click செய்து அறிந்து கொள்ளலாம்.
தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுக்கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவுகளை ஒப்படைத்து அதற்குரிய கட்டணத்தொகையை பணமாக செலுத்த வேண்டும்.
கட்டணம் :
மறுமதிப்பீடு :
பாடம் ( ஒவ்வொன்றிற்கும் ) ரூபாய் – 505/-
மறு கூட்டல் :
பாடம் ( ஒவ்வொன்றிற்கும் ) ரூபாய் 205 /-












