கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
36 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து பள்ளி நேற்று ( 02.06.2025 ) திறக்கப்பட்டது.
பள்ளிகளில் ஏற்கனவே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் பள்ளிக்கு
மாணவர்கள் உற்சாகமாக வருகை தந்தனர்.
செயலர் அய்யனார் :
பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்த மாணவர்களுக்கு
பள்ளித்தலைவர் மற்றும் செயலர் அய்யனார் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.
காலை வழிபாட்டுக் கூட்டத்தில்
மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தலைமையாசிரியர் வெங்கடேசன் உரையாற்றினார்.
விலையில்லா நோட்டு புத்தகம் :
பள்ளி திறந்த முதல் நாளிலே மாணவர்களுக்கு விலையில்லா பாட நூல்கள் வழங்கப்பட்டது. அனைத்து
ஏற்பாடுகளையும் வகுப்பு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.












