ஜீன் – 2 ல் பள்ளியை திறக்க தயார்
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகும் என்று மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருந்த சூழலில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறத்துள்ளது.
இதனால் அரசும் அறிவித்த மாதிரியே ஜுன் 2 ம் தேதியே பள்ளிகளை திறக்கும் முனைப்பில் வேகமாக முன்னெடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே புத்தகங்கள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த முறையும் எந்த ஒரு பள்ளிகளுக்கும் விடுபடாமல் புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை உத்தரவின் படி பள்ளிக் கட்டிடங்கள், வகுப்பறைகளை சுத்தம் செய்வது, தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்வது, அமரும் இருக்கைகள் மற்றும் மின்சாரம் சம்பந்தமான சாதனங்களை பராமரித்தல் போன்ற வேலைகள் பள்ளிகளில் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.
மேலும் பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமரா, அவசரகால கதவுகள், முதலுதவிப் பெட்டி, இருக்கைகள், பேருந்தின் அடித்தளங்கள் சரியாக இருக்கின்றதா என்பதனை ஆய்வு செய்யப்பட்டு வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது.
மேலும் இந்த கல்வியாண்டிற்கான அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி நோட்டு புத்தகம், காலணி, சீருடை, பேருந்து பயண அட்டை, சைக்கிள், புத்தக பை, கணித உபகரணம், வண்ண பென்சில், புவியியல் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலவசமாக வழங்க தயாராக உள்ளது..
அதனடிப்படையில் பள்ளிக்கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும்
புதிய பாடத்திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து ஜூன் 3-ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
இதனையடுத்து பள்ளிக்கு செல்ல மாணவர்களும், மாணவர்களை வரவேற்க பள்ளிகளும், இருவரையும் கையாள ஆசிரியர்களும் 2025 – 2026 ம் கல்வியாண்டிற்கு தயாராக இருக்கின்றார்கள்.












