தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் முக்கிய அறிவிப்பு

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் முக்கிய அறிவிப்பு

அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மற்றும் மேல்நிலைப்பள்ளி அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன் விபரம் வருமாறு:

நாளை 19-4-26 ஞாயிற்றுக்கிழமை தேர்தல் இரண்டாவது repeater பயிற்சி வகுப்பு ஏற்கனவே இரண்டாவது பயிற்சி வகுப்பு நடைபெற்ற அதே இடத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் நடைபெறுகின்றது. அதில் PRESIDING OFFICER மற்றும் POLLING OFFICER-1 இருவர் மட்டும் கலந்து கொண்டால் போதுமானது. PO-II மற்றும் PO-III கலந்து கொள்ள தேவையில்லை.

ஆனால் கடந்த 15-4-2026 புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத PO-II,PO-III இருந்தால் அவர்கள் நாளை நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் EDC சான்றிதழ் பெறாத PO-II ,PO-III அல்லது இரண்டாவது பயிற்சி வகுப்பில் ஓட்டு போடாத PO-II,PO-III ஆகியோரும் நாளைய தினம் தங்கள் ஏற்கனவே கலந்து கொண்ட அதே பயிற்சி வகுப்பில் EDC சான்றிதழை பெற்றிடவும் அல்லது தங்கள் ஓட்டினை பதிவு செய்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாளை நடைபெறும் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிடுவதனால் சரியான நேரத்தில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.