கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி,
ஏழை குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகுமா?
RTE – Right of Children to Free and Compulsory Education Act or Right to Education Act (RTE),
இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் படி 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை முடிந்திருக்க வேண்டிய சூழ்நிலையில், தமிழகத்தில் இதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
இதுதொடர்பான வழக்கின் விசாரணையில், முடிவடைந்ந நிலையில் தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை.
இந்த 25% ஒதுக்கீட்டில் சேரும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளிகளுக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் செலுத்துவதில், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு இல்லாததே காரணமெனத் தெரியவந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த சட்டத்தின்படி சேர்க்கப்படும் குழந்தைகளுக்காக பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லையென்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததால் தான் நிதி ஒதுக்கவில்லை என்று மத்திய அரசு இதற்கு பதிலளித்துள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் (RTE சட்டம்), 2009 என்பது, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்கும் ஒரு இந்திய சட்டம் ஆகும். இந்த சட்டம் 4 ஆகஸ்ட் 2009 அன்று பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது.
தனியார் பள்ளிகளில், பின்தங்கிய பிரிவினருக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
கல்வி தரத்தை உறுதி செய்ய, மாணவர்-ஆசிரியர் விகிதம், வகுப்பறை வசதிகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை உறுதி செய்ய சட்டம் கூறுகிறது.
சட்டத்தின் நோக்கம்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21A வின் கீழ், கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை என்று அறிவிக்கப்பட்டதன் மூலம், அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கும் என்பதை உறுதி செய்வதே RTE சட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
இச் சட்டம் மாநிலங்களவையில் ஜூலை- 20 – 2009 மற்றும் மக்களவையில் ஆகஸ்ட் – 4 – 2009 ல் இயற்றப்பட்டது. இது 26 ஆகஸ்ட் 2009 ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்து இலவச மற்றும் கட்டாய கல்வி குழந்தைகளின் உரிமை என்ற சட்டம் என அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம் ஏப்ரல்- 1 – 2010 ல் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது.
மன்மோகன் சிங்:
இந்த சட்டம் இந்திய வரலாற்றில் முதல் முறையாக பிரதம மந்திரியின் பேச்சு மூலம் அமலுக்கு வந்ததுஆகும் . இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங், அவரது உரையில், “நாம் அனைத்து குழந்தைகளுக்கும்,பாலினம் மற்றும் சமூக வகை, வேறுபாடின்றி கல்வி அளிக்க வேண்டும். ஒரு கல்வி அவர்களை பொறுப்பான மற்றும் நல்ல குடிமக்கள் ஆக தேவையான திறமைகள், அறிவு, மதிப்பு மற்றும் மனப்போக்கு பெறுவதற்கு உதவ வேண்டும்.” என்று கூறினார்.
கூட்ட முடிவுகள்:
இதையடுத்து இன்று நடைபெற்ற விசாரணையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், 25 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மே 28 ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்












