11 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – 2025 வெளியானது
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி முதல் மார்ச் 27-ம் தேதி நடைபெற்றது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,23,261 மாணவர்கள் எழுதினர்.
11-ம் வகுப்பிற்கு கணினி அறிவியல் பாடத்தில் 2 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக வழங்கப்பட்டுள்ளது. மே 16-ம் தேதி இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
11-ம் வகுப்பு முடிவுகளை மாணவர்கள்
https://tnresults.nic.in
https://results.digilocker.gov.in
ஆகிய இரண்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.
மறுக்கூட்டல் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி?
தற்போது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வு முடிவுகளின் திருப்தி அடையாதவர்கள் மறுக்கூட்டல் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்தாண்டு நேரடியாக விண்ணப்பிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் முதலில் விடைத்தாள் நகல்களை கோரி விண்ணப்பித்து பெற்றுக்கொண்ட பிரிவு மறுக்கூட்டல் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோரும் மாணவர்கள் வரும் 20.05.2025 முதல் 24.05.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் தேர்வு மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோரியவர்கள் மட்டுமே மறுக்கூட்டல் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும்.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூலை 4-ம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களுக்கு வரும் ஜூலை 4-ம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை இன்று வெளியாகும்.
மதிப்பெண் சான்றிதழ் எப்போது?
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு முடிவுகளுக்கான மதிப்பெண் பட்டியல் வரும் மே 19-ம் தேதி முதல் பள்ளிகளில் விநியோகம் செய்யப்படும். மேலும், மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.












