10 மற்றும் 11 ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து

10 மற்றும் 11 ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து

10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்! பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்று அதிக மதிப்பெண்கள் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்! மனம் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்தி தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்! என்று முதல்வர் ஸ்டாலின் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.