இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் 471 மார்க் : கோரிக்கையை நிறைவேற்ற.முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

                                                          இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் 471 மார்க் :

                                                                   கோரிக்கையை நிறைவேற்ற.முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா.  இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுவயதிலேயே இரண்டு கைகளையும் இழந்த மாணவன் கீர்த்தி வர்மா படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும் ஓவியம் வரைவதிலும் இவர் கைதேர்ந்தவராக இருந்தார்.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவன் கீர்த்தி வர்மா 437 மதிப்பெண் பெற்று தான் படித்த பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்தார். இவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டினர்.

இந்நிலையில் இந்த வருடம் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய கீர்த்தி வர்மா 471 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆசிரியர்களின் துணையோடு தேர்வு எழுதிய மாணவன் 471 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். இவரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து பேசிய மாணவன் கீர்த்தி வர்மா அடுத்ததாக பொறியியல் படிக்க ஆசைப்படுவதாகவும், அதற்கு அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் மேலும் இரண்டு கைகளை இழந்த தனக்கு, கைகளை பொருத்த தமிழக முதல்வர் தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும், தாயின் அரவணைப்பில் வாழும் தனக்கு அரசு முன்வந்து உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து இந்த வீடியோவை வைரலாகி முதலமைச்சரின் கவனத்துக்கு சென்றது. இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணயன் உங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளை கவனிப்பார், கவலை வேண்டாம் என கூறியுள்ளார்.