தமிழக அரசு பாடதிட்டத்தை சிபிஎஸ்இ பாட திட்டத்திற்கு இணையாக மாற்ற வேண்டும்.60 வயதில் நீட் தேர்வு எழுதும் சித்தா மருத்துவர் கோரிக்கை

        தமிழக அரசு பாடதிட்டத்தை சிபிஎஸ்இ பாட திட்டத்திற்கு இணையாக மாற்ற வேண்டும்.
                                   60 வயதில் நீட் தேர்வு எழுதும் சித்தா மருத்துவர் கோரிக்கை

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தவறான முடிவு எடுக்கக் கூடாது.. மேலும், தமிழக அரசு நீட் தேர்வுக்கு தகுதி பெரும் வகையில் பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை
வைத்தார் தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் பகுதியை சேர்ந்தவர் பச்சைமால் (60),

இவர் சித்தா மருத்துவர் ஆவார். தூத்துக்குடி மற்றும் அருகே உள்ள பகுதிகளில் சித்தா மருத்துவமனை துவங்கி பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். மேலும், சிறு வயது முதலே படிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமப்புறமான திருவைகுண்டம் அருகே அமைந்துள்ள பேட்டு துரைசாமிபுரம் பகுதியில் இருந்து அரசு பள்ளியில் படித்து அந்த நேரத்தில் மருத்துவம் படிக்க முடியாததால் சித்தா மருத்துவம் படித்ததாகவும் தனது வெகு நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் தற்போது நீட் தேர்வுக்கு நன்றாக மூன்று மாதங்களாக படித்து நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்து இன்று நீட் தேர்வு எழுத உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சட்டப்படிப்பும் முடித்துள்ளார். இந்த 60 வயதிலும் தான் நீட் தேர்வு எழுதும் போது நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் தேர்வில் ஒரு முறை தோல்வி அடைந்தவுடன் தவறான முடிவு எடுக்கக் கூடாது மேலும் தமிழக அரசு நீட் தேர்வில் பெரும்பாலும் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ளது போன்ற கேள்விகள் கேட்கப்படுவதால் தமிழக அரசு தனது பாடத்திட்டையும் சிபிஎஸ்இ க்கு இணையாக தரமானதாக மாற்ற வேண்டும்.

மேலும் மத்திய அரசும் இந்த நீட் தேர்விற்கு வயது வரம்பை கொண்டு வர வேண்டும். தான் தற்போது 60 வயதில் நீட் தேர்வு எழுதினாலும் தான் மருத்துவத்துறையில் இருப்பதால் இதை செய்ய முடிகிறது இதேபோன்று எல்லாரும் செய்ய முடியாது எனவே நீட் தேர்வுக்கு வயது வரம்பை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என வேண்டுகிறேன்.

நான் நீட் தேர்வில் வெற்றி பெற்று சித்த மருத்துவத்துடன் இணைந்து அலோபதி மருத்துவத்தையும் சேர்த்து தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து அவர்களை குணமாக்குவதே தனது லட்சியம் அதற்காகவே தனது மருத்துவ கனவிற்காக தான் நீட் தேர்வு எழுதுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தனது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மருத்துவத் துறையில் உள்ளனர் தனது மனைவியும் பட்டதாரி எனவே தான் மருத்துவராகி பொதுமக்களுக்கு சேவையாற்றுவேன் என்றார்.

                                               Grand Daughter Of Patchaimal