சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30 சதவீதத்திற்கும் கீழ் மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி இல்லை

சிபிஎஸ்இ தேர்வில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் 30 சதவீதத்திற்கும் கீழ் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட மாட்டாது என்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் உள்ள சில சிபிஎஸ்சி பள்ளிகள் இந்த விவரத்தை பெற்றோர்களிடம் தெரிவித்து ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை சிபிஎஸ்சி வாரியம் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. இதன்படி 5 மற்றும் 8 ம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வது தொடர்பாக சிபிஎஸ்சி தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனால் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பாக சிபிஎஸ்சி வாரியம் முறையாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பெற்றோர்கள் கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












