கல்லூரிக் கனவு திட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டமாகும்.
இது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
இத் திட்டம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டுதலை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும். கல்வித்திறனை மேம்படுத்துதலே இதன் நோக்கம் ஆகும்.
மேலும் இத் திட்டத்தை வளர்த்து தமிழகத்தை கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டுவது பள்ளி மற்றும் கல்லூரிகளின் கடமையாகும்.
பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மாணவர்கள் தான் எந்த கல்லூரியில் சேரலாம் நாம் சேர இருக்கும் கல்லூரியில் என்ன என்ன அம்சங்கள் இருக்கின்றன. கல்லூரியில் உள்ள விளையாட்டு அரங்கம், நூலகங்கள், பயிற்சி வகுப்புகள், ஆய்வகங்கள் போன்ற வசதிகளை தாங்கள் கல்லூரியில் சேருவதற்கு முன்பே அந்த கல்லூரியை பற்றி அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
இந்த கல்லூரிக் கனவு திட்டம் கிராமத்தில் படித்துவிட்டு நகரத்திற்கு வந்து தங்களது கல்லூரி படிப்பை தொடங்க இருக்கும் மாணவர்கள் தான் படிக்க இருக்கும் கல்லூரியை பற்றி மிகுந்த கனவுடன் இருப்பார்கள். அவர்களின் கனவுகளை நனவாக்குவதே இந்த கல்லூரி கனவு திட்டமாகும்.
இந்த வருடம் 2025 கல்லூரிக் கனவு திட்டம் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை ( இன்று ) 5 நாட்கள் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டத்தை அவரது வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
இளம் பகவத் ஐ.ஏ.எஸ் மாவட்டம் முழுவதும் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களை தான் மேலும் படிக்க இருக்கும் கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்காக இந்த கல்லூரி கனவு திட்டத்தை கடந்த ஐந்து நாட்களாக நடத்தி மாணவர்களின் கல்லூரிக் கனவை நனவாக்க பெரும் உதவியாக இருந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஐஏஎஸ் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 75 ஆண்டுகளை கடந்து பவள விழாவை கொண்டாடி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வ. உ. சிதம்பரம் கல்லூரியில் கல்லூரிக் கனவு திட்டம் கடந்த ஏப்ரல் 23 முதல் 28ஆம் தேதி இன்று வரை வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு கல்லூரி பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டார்கள்.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி கனவு திட்டத்தில் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு ஒவ்வொரு நாளும் கலந்து கொண்டு கல்லூரிக் கனவு நிகழ்வுக்கு வந்திருந்த மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்தி வரவேற்று மேற்படிப்பின் அவசியம், கல்லூரியில் உள்ள விளையாட்டு நூலகம் மற்றும் ஆய்வக வசதிகள், கல்லூரியில் உள்ள படிப்புகள் மற்றும் அதை படிப்பதன் மூலம் மாணவ மாணவியர் பெற இருக்கின்ற வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள், கல்லூரி கட்டணங்கள் மற்றும் அரசால் வழங்கப்படுகின்ற உதவித் தொகைகள் பற்றி விளக்கி பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏறத்தாழ 52 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 535 மாணவ மாணவியர்
வ.உ.சிதம்பரம் கல்லூரியை பார்வையிட்டனர்.
இதில் கல்லூரி பற்றிய தகவல் விளக்க படம் , துறை சார்ந்த கருத்துரைகள், அறிவியல் துறைகள் ஆய்வக பார்வையிடல், நூலகம், விளையாட்டரங்கம் மற்றும் கலைத்துறை உள்ளிட்ட கல்லூரி உட்கட்டமைப்பு வசதிகள் பார்வையிடல் ஆகியன நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலில்,
வ. உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தலைமையில், கல்லூரிக் கனவு ஒருங்கிணைப்பாளர் கணிதத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். ஜாக்சன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் விலங்கியல் துறை உதவி பேராசிரியை முனைவர். கிருஷ்ண பிரியா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
துறைத்தலைவர்களின் ஒத்துழைப்பும், பேராசிரியர்களின் ஈடுபாடு மிகுந்த விளக்கமும், ஆசிரியர் அல்லாத அலுவலர்களின் உழைப்பும் இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த உதவி புரிந்தது என முதல்வர் முனைவர் வீரபாகு கூறினார்.
மேலும்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்படிப்பின் அவசியத்தையும், வ உ சிதம்பரம் கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகள் ஆய்வக வசதிகள் மற்றும் துறைசார் தகவல்களைப் பெற கல்லூரி கனவு நிகழ்ச்சி உதவியதாக தெரிவித்த மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்ற தமிழக முதல்வர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், தங்களுக்கு சிறப்பாக வழிகாட்டிய
வ. உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்கள்.












