தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்களுக்கு வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
இன்டர்ன்ஷிப் காலத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டும் வகையில் வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி மாணவர்களின் ஊதியத்துடன் கூடுதலாக ரூ.1000/- வழங்கியுள்ளார்.
வ.உ.சிதம்பரம் கல்லூரி சார்பில், வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி மற்றும் மனிதவள மேலாளர் மணிகண்டன் ஆகியோருக்கு நன்றிகளை கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தெரிவித்தார்.












