தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி சார்பாக சிறப்பு பள்ளியை பார்வையிடுதல்

வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் கல்வித்துறை சார்பாக 15.04.2025 அன்று வ.உ.சி கல்வி அறிவுசார் ஊனமுற்றோர் பள்ளிக்கு இளங்கலை கல்வியியல் இரண்டாம் ஆண்டு மாணவ – ஆசிரியர்களின் நான்காவது பருவத்திற்கான பாடம் தொடர்பாக காலை 10.30 மணி முதல் மதியம் 03.30 மணி வரை பார்வையிட்டனர்.

இரண்டாம் ஆண்டு மாணவ-ஆசிரியர்களுடன் முதல்வர் முனைவர்.கனகராஜ் மற்றும் இரண்டாம் ஆண்டு பாடத்தை கையாளும் ஆசிரியர் கல்வியாளர்களுடன், பள்ளியைப் பார்வையிட்டனர்.

சிறப்பு ஆசிரியர்கள் மாணவ-ஆசிரியர்களுக்கு சிறப்பு குழந்தைகள் பற்றிய தெளிவான கருத்துக்களை எடுத்துரைத்தனர். தொடர்ந்து மாணவ-ஆசிரியர்கள் தங்கள் நடன நிகழ்ச்சி, பாடல்கள், கதை சொல்லல், இசை நாற்காலி மற்றும் பந்துவீச்சு விளையாட்டு மூலம் சிறப்பு குழந்தைகளை அன்றைய தினத்தை ரசிக்க வைத்தனர்.

மாணவ-ஆசிரியர்கள்அனைத்து குழந்தைகளுக்கும் தண்ணீர் பாட்டில்களை பரிசளித்தனர். மேலும் கல்வித்துறை இணைப் பேராசிரியர் முனைவர்.பிரேமலதா மற்றும் கல்வித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். சசிகலா ஆகியோர் பள்ளிக்கு வெள்ளைத் தாள்கள் (காகிதப் பைகள் தயாரிப்பதற்கான) மற்றும் டேக் கோப்புகளை வழங்கினர்.

முதல்வர் முனைவர் கனகராஜின் வழிகாட்டுதல்படி இவ் நிகழ்வு நடைபெற்றது.