தூத்துக்குடி சி.வ. மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் UKG மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தூத்துக்குடி நகர்புறம் வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் கணபதி முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் ஜீலியா பெர்னாண்டோ அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் மாணவர்களை கெளரவித்து பட்டமும் கேடயமும் வழங்கினார்.
விழாவில் மாணவர்களின்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.












