தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பாரம்பரிய தினம், உலக பூமி தினம் மற்றும் சர்வதேச உயிர் பன்மை தினம் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. தாளாளர் அருட்சகோதரி. பெர்னதத் மேரி, பள்ளித் தலைமை ஆசிரியை அருட்சகோதரி. சகாய ஹேமலதா ஜெயந்தி மற்றும் உதவி தலைமைஆசிரியரை அருட் சகோதரி. வணக்கப்பிரகாசி தலைமையில் சிறப்பிக்கப்பட்டது. அன்றையதினம் ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு மாணவிகள் பிறந்தநாள் பரிசாக பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களையும், மரக்கன்றுகளையும் வழங்கிய பின் மாணவிகள் சொற்பொழிவு மூலமாகவும், பாடல் மூலமாகவும் முப்பெரும் விழாவினை சிறப்பித்தார்கள்.

தலைமை ஆசிரியர் இவ்வாண்டு முழுவதும் பசுமை படை விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி,ஓவியப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கினார்கள் நிகழ்ச்சி முடிவில் பங்கேற்ற மாணவிகளையும், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சகாய ஆனந்தி விண்ணரசியையும் பாராட்டினார்கள்.