தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி லிவோரா 2026 கண்காட்சியில் அனைவரையும் கொண்டாட்டம் போட வைக்கும் கொண்டை அழகி”கொக்கோட்டோ” பறவை :
தூத்துக்குடியில் பாரம்பரியமிக்க வ.உ.சிதம்பரம் கல்லூரி தனது 75வது ஆண்டு பவள விழாவை கொண்டாடி வருகிறது.
அதனை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அதன் ஒரு பகுதியாக லிவோரா 2026 கண்காட்சி கடந்த 07 ஆம் தேதி தொடங்கி 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.கண்காட்சி 4வது நாளான 10 ஆம் தேதி இன்று கடைசி நாளாகும்.

முன்னதாக கண்காட்சி முதல் நாளான கடந்த 07ம் தேதி கல்லூரிச் செயலர் கல்வித் தந்தை திரு.ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம் மற்றும் இ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரிச் செயலர் திருமதி.சுப்புலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
கண்காட்சியில் பறவைகள், விலங்குகள், பாம்பு, நாய் என பல்வேறு உயிருள்ள விலங்குகள் ஒரு செல் அமீபாவில் இருந்து மனிதன், யானை போன்றவற்றின் எலும்புக்கூடுகள் வரை இடம்பெற்றுள்ளன.
இத்தனை வகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தாலும் எல்லோர் மனதிலும் இடம் பெற்றது ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவின் பறவையான கொண்டை அழகி கொக்கோட்டோ ( MULUCCAN COKKOTTO ) ஆகும்.
வெள்ளை நிறத்தில் இருப்பதனால் இதனை ஸ்னோ மற்றும் ஒயிட்டி என்று அழைக்கிறார்கள்.
குளிர் பிரதேசங்களில் உள்ள இந்த கொக்கோட்டோ காற்று அடித்தவுடன் மயில் மாதிரி கொண்டையை விரித்து ஆடிப் பாட ஆரம்பித்து விடுகிறது. கொண்டையை விரித்து ஆடும் போது அதன் கொண்டையின் உட்புறம் உள்ள முடி ஆரஞ்ச் கலரில் இருப்பது அனைவரையும் வியப்படையச் செய்கிறது.
70 வயது வரை வாழும் இந்த ஆஸ்திரேலியா கொக்கோட்டோ 7 வயதில் தான் முட்டையிட ஆரம்பிக்கிறது. 5 முட்டைகள் வரை இடும் இந்த பறவை 3 குஞ்சுகள் பொரிக்கும். இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் பெரும்பாலும் பெண் கொக்கோட்டோ ஆண் கொக்கட்டோவிடம் சண்டையிட்டு கொன்று விடுமாம்.
நட்ஸ், பழங்கள், காய்கறிகள் மற்றும் சூரியகாந்தி விதைகளை உண்ணும் இந்த ஒயிட்டியின் விலை என்ன தெரியுமா? சிறிது மூச்சை இழுத்துக்கொள்ளுங்கள். இரண்டரை லட்சமாம் ( 2.5 லட்சம்).
ஸ்நோவை கண்டவுடன் என் உடல் குளிர்ச்சியாகி மனது ஒயிட்( வெள்ளை )டி ஆகி அதன் மீது காதலாகி விட்டது எனக்கு.
“கொக்கோட்டோ” என்றாலே கொண்டாட்டம் தான்.
தகவலுக்கு நன்றி
திரு.பர்வேஷ்
திண்டுக்கல்.












