தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் “SIGMA”மாணவர் அமைப்பு தொடக்கம் !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை கணிதவியல் துறையின் சார்பில், “SIGMA” எனும் மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டது.
மாணவர்களின் கணிதத் திறன் மற்றும் ஆர்வத்தை வளர்ப்பதற்காக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

SIGMA அமைப்பின் தொடக்க விழா 30 செப்டம்பர் 2026 இன்று காலை 11.30 மணிக்கு, வைர விழா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர.வீரபாகு தலைமை வகித்தார்.
கணிதவியல் துறையின் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர்.ஜாக்சன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகின்றனர். கணிதவியல் துறையின் பேராசிரியர்களும் இவ்வமைப்பிற்கு ஆதரவளிக்கின்றனர்.

மாணவர் நிர்வாகிகள் மற்றும் மாணவர் செயற்குழு (Student Executive Council) ஆகியோர், SIGMA அமைப்பின் மூலம் கணிதச் சிந்தனை, திறனறிவு, கல்வி மேம்பாடு மற்றும் மாணவர்கள் முன்னெடுக்கும் பல்வேறு செயல்பாடுகளை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்ற உள்ளனர்.
இத்தொடக்கம், கல்லூரி வளாகத்தில் சிறப்பான கணிதச் சமூகத்தை உருவாக்குவதற்கும், வகுப்பறைக் கல்விக்கு அப்பாற்பட்டு கணிதத்தை ஆர்வத்துடன் ஆராய மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

கணிதவியல் துறை, பேராசிரியர்கள், மாணவர் நிர்வாகிகள் மற்றும் SIGMA அமைப்பின் அனைத்து மாணவர்களுக்கும் வெற்றிகரமானதும் பயனுள்ளதுமான பயணத்திற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! என்று கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தெரிவித்தார்.













