தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை : மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 5 ம் திறக்கப்படும் !

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை :
மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 5 ம் திறக்கப்படும் !

தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை நாளை மறுநாள் செப்டம்பர் 26 ம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் துவக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் காலாண்டுத்தேர்வு விடுமுறை 26.09.2026 முதல் 04.10.2026 வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . மீண்டும் 05.10.2026 திங்கட்கிழமை அன்று அனைத்துவகைப் பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் அன்று 1 முதல் 7 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடநூல் வழங்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகள் திறக்கும் நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் விடைத்தாள்களை வழங்கி மதிப்பெண்களை உரிய பதிவேடுகளில் / EMIS-ல் பதிவு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விஜயதசமி அன்று அரசு, அரசு உதவி பெறும் துவக்க / நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விவரங்களை EMIS கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் பள்ளியினால் உள்ளீடு செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் ( இடைநிலை, தொடக்க கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்)ஆகியோர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப் பட்டுள்ளது.

இங்கே பதிவிறக்கம் செய்யவும்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Press Release

Quartely Exam Leave and Reopening of Schools- Instructions