கோடை விமுறை முடிந்து புதிய கல்வியாண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் நாளை திறப்பு: தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி பள்ளிகளை ஆய்வு செய்தார்!

கோடை விமுறை முடிந்து புதிய கல்வியாண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் நாளை திறப்பு:
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி பள்ளிகளை ஆய்வு செய்தார்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் நாளை ஜூன் 4-ஆம் தேதி வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

முன்னதாக வகுப்புகளுக்கு ஏற்ப வெவ்வேறு தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், வெயிலின் தாக்கம் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளை ஏற்று அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே நாளில் பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

புதிய கல்வி ஆண்டிற்காக பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு மாநகராட்சி பள்ளிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளியின் கட்டிடங்கள்,வகுப்புகளின் கட்டமைப்பு, கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் மின்சார பாதுகாப்பு போன்ற முக்கிய வசதிகளை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப உடன் ஆய்வு செய்தார் .

மேயருடன் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா , மாமன்ற உறுபினர் மும்தாஜ் மற்றும் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.