கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் : பாளை.செயின்ட் ஜான்ஸ் கல்லூரிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை!

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் :
பாளை.செயின்ட் ஜான்ஸ் கல்லூரிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை !

கோவில்பட்டி கேஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை மற்றும் மொழியியல் மன்றத்தின் சார்பில் “Lingua Carnival 2K26” என்ற தலைப்பில் 23.09.2026 அன்று ஒருநாள் மாநில அளவிலான பயிற்சிப் பட்டறை மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வின் முக்கியப் பயிற்சிப் பட்டறை “Echoes of English – Powered by AI” என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் தலைமை தாங்கினார். திருநெல்வேலி செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜன்னேகர் லாரன்ஸ் டேனியல் சிறப்பு வளவாளராகக்கலந்து கொண்டு, “Echoes of English – Powered by AI” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

செயற்கை நுண்ணறிவுக்கும் ஆங்கிலமொழிக்கும் இடையிலான தொடர்பு, மொழிக்கற்றல், இலக்கியப் பயில்வு மற்றும் நவீனதகவல் தொடர்பு ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள்குறித்து வளவாளர் ஆழமான கருத்துகளையும் பயனுள்ள தகவல்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ஒட்டுமொத்த கோப்பையை வென்ற பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரி அணியினர்

இலக்கணத்திருத்தம், இலக்கியப் பகுப்பாய்வு, டிஜிட்டல் தகவல்தொடர்பு மற்றும் படைப்பாற்றல் வெளிப்பாடு போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முறைகளையும் எடுத்துரைத்தார். மேலும், கல்வி மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்காக வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை பொறுப்புடனும் நெறிமுறையுடனும் பயன்படுத்துமாறு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

மாணவர்களின் படைப்பாற்றல், மொழித்திறன், அறிவுத்திறன் மற்றும் கலைத்திறனை வளர்க்கும் வகையில் “Lingua Carnival 2K26” நிகழ்வின் ஒரு பகுதியாக பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பாளை.செயின்ட் ஜான்ஸ் கல்லூரி ஒட்டுமொத்த கோப்பையை வென்றது.
இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆங்கிலத் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டன.