பாளை தூய இன்னாசியார் கல்வியியல் கல்லூரியில் இனிகோ வேலைவாய்ப்பு விழா – 2026

பாளை தூய இன்னாசியார் கல்வியியல் கல்லூரியில் இனிகோ வேலைவாய்ப்பு விழா – 2026

பாளையங்கோட்டை தூய இன்னாசியார் கல்வியியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், 28.02.2026 அன்று “இனிகோ வேலைவாய்ப்பு விழா 2026” நடைபெற்றது. திருநெல்வேலி, தென்காசி, மானாமதுரை, சங்கரன்கோவில், கோவில்பட்டி மற்றும் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 30 பள்ளிகள் பங்கேற்றன. கல்லூரியின் 59 மாணவ ஆசிரியர்கள் இந்நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்.

பெருமைக்குரிய விதமாக, 59 பேரும் முழுமையாகத் தேர்ச்சி பெற்று, சிறந்த ஊதியத்துடன் பல்வேறு முன்னணி பள்ளிகளில் பணியில் அமர்த்தப்பட்டனர். இதன் மூலம் 100 விழுக்காடு பணியமர்த்தல் என்ற சிறப்புச் சாதனை நிகழ்ந்தது.

கல்லூரியின் செயலர் அருட்சகோதரி மேரி செலஸ்டினா மற்றும் முதல்வர் முனைவர். அருட்சகோதரி.வசந்தி மெடோனா உட்பட அனைத்து பேராசிரியர்களும் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர். மாணவர்கள் தங்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வின் மூலம் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர்.

இவ்விழாவின் வெற்றி, இக்கல்லூரி வழங்கும் உயர்தர ஆசிரியர் கல்வியும், மாணவர்களின் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கான தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதை வெளிப்படுத்துகிறது.