தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தினம்
தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தினம் தலைமை ஆசிரியர் அருள் சகோதரி சகாய ஹேமலதா ஜெயந்தி , மற்றும் உதவி தலைமை ஆசிரியர் அருள்சகோதரி கிறிஸ்டி தலைமையில் நடைபெற்றது.

இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி மாணவிகள் தலைமையாசிரியரிடம் விதை பந்து தயாரிப்பதற்கு வேப்ப விதைகளையும், பிறந்தநாள் பரிசாக பத்தாம் வகுப்பு மாணவிகள் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களையும், மாணவி கிருத்திகா ஸ்ரீ தேக்கு மரக்கன்றையும் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள். மாணவி பிரியதர்ஷினி இயற்கையை பற்றிய பாடலும், பால இசக்கி கவிதை சொல்ல, மாணவி நாக பிரதிக்க்ஷா சொற்பொழிவு ஆற்ற விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

தலைமை ஆசிரியர் இயற்கை பாதுகாப்பு தினத்தில் பங்கேற்ற அனைத்து மாணவிகளையும், பசுமைப்படை ஆசிரியர் சகாய ஆனந்தி விண்ணரசியையும் பாராட்டினார்.













