தூத்துக்குடி சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் கதை சொல்லும் நிகழ்வு

தூத்துக்குடி சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் கதை சொல்லும் நிகழ்வு

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் இணைந்து நடத்திய கதை சொல்லும் நிகழ்வு சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் தலைமையுரையாற்றினார். மாணவர் மாணவிகளுக்கு தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் பணி நிறைவு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் ஹென்றி ஸ்டீபன்சன் மாணவர் மாணவிகளுக்கு நற்பண்புகள் வளர்க்கும் கதைகள் சொல்லி தன்னம்பிக்கை ஏற்படச்செய்தார்.

நிகழ்வில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர கிளைச் செயலாளர் தோழர் மாரிமுத்து வரவேற்புரையும் நன்றியுரையும் தெரிவித்தார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை செயலாளரும், புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தின் அமைப்பாளருமான தோழர் ரவி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.