நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை பேராசிரியர்களுக்கு முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கான வாய் மொழித் தேர்வு நடைபெற்றது !
நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), தாளூர், துணை பேராசிரியர்களான கங்கா, மற்றும் பிபின் பேபி, ஆகிய இருவருக்கும் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கான வாய்மொழித் தேர்வு (Viva Voce Examination) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்று, சிறப்பான கல்வியியல் மதிப்பீட்டையும், ஆய்வு சார்ந்த வழிகாட்டுதலையும் வெளிப்புறத் தேர்வாளர் முனைவர். பிரபு, பேராசிரியர், கணிணி அறிவியல் துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. வழங்கினார்.

நிர்வாக இயக்குநர் மற்றும் செயலாளர் முனைவர் ராஷித் கஸ்ஸாலி,கல்லூரி நிர்வாக குழு முதன்மை உறுப்பினர் பேராசிரியர் மோகன் பாபு , முதல்வர் முனைவர் பால ஷண்முக தேவி , துணை முதல்வர், புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஆய்வு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களும் பங்கேற்றனர்.

ஆழ்ந்த கருத்து பரிமாற்றத்திற்கு பின்னர் வாய்மொழித்தேர்வு இனிதே நிறைவுற்றது. புறத்தேர்வாளர் முனைவர்.பிரபு முறையே வாய்மொழித் தேர்வில் இருவரும் தேர்ச்சி உற்றதை அறித்தார். கணிணி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர்.கங்கா மற்றும் பிபின் பேபி அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம், முதல்வர், பேராசிரியர் மற்றும் ஏனையோர் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.












