கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியப் பிரதமரின் கேலோ இந்தியா உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது !
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு 27.8.2026 நேற்று இந்தியப் பிரதமர் கேலோ இந்தியா நிகழ்ச்சியை இந்தியா முழுவதும் காணொளி வாயிலாக மாணவ மாணவிகள் மத்தியில் தொடங்கி வைத்து கலந்துரையாடி உரை நிகழ்த்தினார்.
அவர்தன் உரையில் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இளைஞர்கள் குறித்து வளர்ச்சி பாதையை இலக்கை எட்டுவது குறித்தும் இளைஞர்கள் திறன் மேம்பாடு குறித்தும் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கு எட்டணம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒன்றிணைந்து பாடுபட அழைப்பு விடுத்து உரையாற்றினார்.

இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மாண்புமிகு பாரதப் பிரதமரின் காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ஜெயா தலைமை தாங்கி வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான இளைஞர்கள் எவ்வாறு இலக்கை எட்ட பாடுபட வேண்டும் என்பதை விளக்கி கூறினார்.
நிகழ்ச்சியின் யூத் ஐகான் எனப்படும் மாணவ பிரதிநிதியாக கடையநல்லூர் அரசு கல்லூரி முன்னாள் மாணவியும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கு பெற்றவரும், தேசிய சப் ஜூனியர் கபடி போட்டியில் பங்கு பெற்றவரும், மாநில அளவில் கபடி போட்டிகளில் கலந்து கொண்டவருமாகிய சுபத்ரா தேவி கலந்து கொண்டு விளையாட்டு திறன்களை மேம்படுத்தி ஒவ்வொருவரும் தம்மை மேம்படுத்திக் கொண்டு நாட்டை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர்.பால் மகேஷ் வரவேற்றுப் பேசினார். நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகளான அன்னலட்சுமி, கௌதம், ஸ்ரீ திருமலை, கவி பாரதி, மதுவிகா ஆகியோர் பிரதமர் கலந்துரையாடலின் தொகுப்பையும் வளர்ச்சி அடைந்த இந்தியா எட்ட வேண்டிய இலக்குகள் குறித்தும் தங்களுடைய பார்வையையும் மாணவ மாணவிகள் மத்தியில் விரிவாக எடுத்துரைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றும் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
இதில் அனைத்து துறை மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர்.பால் மகேஷ் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியை ஆங்கிலத்துறை மாணவன் கௌதம் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கணிதவியல் துறை பேராசிரியர் திரு ஆறுமுகம் நன்றி கூறினார்.
இவ்விழாவில் மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.












