பள்ளி வகுப்புகளில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது : ஒர்க் அவுட் ஆகுமா?
பள்ளிகளில் வகுப்புகளில் மாணவர்கள் அமரும் பெஞ்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக போடப்பட்டு அதில் மாணவர்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக அமர்ந்திருப்பது வழக்கம்.
இனி இந்த நிலையின் அமைப்பை மாற்றி அமைக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். குறிப்பாக தற்போதைய வகுப்பறை அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்களால் சரிவர கவனிக்க முடியாத சூழல் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.எனவே கற்பித்தவில் கவனச் சிதறலை தவிர்ப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறை இருக்கைகள் “ப” வடிவில் அமைக்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
அனைத்து வகை பள்ளிகளிலும் வாய்ப்புள்ள வகுப்பு அறைகளை “ப” வடிவில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும்,இதன் மூலம் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளியில் வகுப்புகளின் அளவுகள் சிறியதாகவே இருக்கும்..” ப” வடிவில் மாணவர்கள் அமர மாற்றி அமைத்தால் அதிகபட்சமாக ஒரு “ப” வரிசையில் 15 முதல் 20 மாணவர்கள் அமரலாம்.. இது மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில்( கிராமத்தில்) நடை முறைப்படுத்த முடியும்..

மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள வகுப்பில் “ப” வடிவில் இருக்கை அமைக்க சிரமம்.. துவக்கப் பள்ளியில் சாத்தியம் இருந்தாலும் வகுப்பின் அளவு சிறியதாக இருக்கும்.
அரசுப் பள்ளிகளில் சாத்தியம் இல்லாத போது,அரசு உதவபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தினால் கண்டிப்பாக வாய்ப்பில்லை.
“ப” வடிவ இருக்கை மாணவர்களுக்கு கற்றல் திறன் அதிகரிக்கும் என்றால் ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் தான் இருக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வர வேண்டும்.. இது சாத்தியம் இல்லை. ஏனென்றால் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பில்லை.
காலரி சிஸ்டம் :
எனவே மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கவும், கற்றலில் கவனக் குறைவு ஏற்படாமல் இருக்கவும், மேலும் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களின் செயல் பாட்டை கவனிக்க( குறிப்பாக கடைசி மாப்பிள்ளை பெஞ்ச் ) மாணவர்களை ஒன்றன் பின் ஒன்றாக உயரமாக அமரும் காலரி ( Gallery ) முறையை நடைமுறைப் படுத்துவது தான் அனைத்து வகை பள்ளி வகுப்புகளுக்கும் சாத்தியமாகும்.
ஆசிரியர்
கல்விச் செய்திகள் டாட் காம்












