தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் 80-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் !

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில்
80-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் !

தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 80-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில்; 80-வது சுதந்திர தினவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியை கிங்ஸ்லின் சோபியா வரவேற்று பேசினார். விழாவில் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ஜெயாசண்முகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அதன் பின் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாறுவேடப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றது. போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆசிரியை செல்வபொன்னரசி நன்றியுரையாற்றினார். ஆசிரியை உதயம்மாள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

நிறைவாக மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு தேசியகீதத்துடன் விழா நிறைவுற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.