தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பொருளாதாரம் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில், “தமிழ்நாடு பட்ஜெட் 2026–2027” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பொருளாதாரம் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில், “தமிழ்நாடு பட்ஜெட் 2026–2027” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி (24.08.2026) நடைபெற்றது.
தமிழ்நாடு பட்ஜெட் 2026–2027-ன் முக்கிய அம்சங்கள், முன்னுரிமைகள் மற்றும் அதன் பொருளாதார தாக்கங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பொருளாதாரத் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் டாக்டர் வள்ளியம்மாள் வரவேற்புரை வழங்கினார். பொருளாதாரத் துறை இணைப் பேராசிரியர் பேராசிரியர் கார்த்தீசன், சிறப்பு விருந்தினருக்குச் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
நாசரேத், பிள்ளையம்மனை, நாசரேத் மார்கோஷிஸ் கல்லூரியின் பொருளாதாரமத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் வி. ஆரோக்கிய அமுதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியில் அதன் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள மற்றும் தகவலளிக்கும் உரையை வழங்கினார்.

பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் தகவல் நிறைந்ததாகவும் அமைந்தது. மாநில பட்ஜெட் மற்றும் பொருளாதார, சமூக வளர்ச்சியில் அதன் பங்கு குறித்த அவர்களின் புரிதலை இந்நிகழ்ச்சி மேலும் மேம்படுத்தியது.
இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு தொடர்ந்து ஆதரவளித்த முதல்வர் டாக்டர் சொ. வீரபாகு அவர்களுக்கு, பொருளியல் துறைத் தலைவர் டாக்டர் வள்ளியம்மாள் மற்றும் துறைப் பேராசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கப்பட்டது.












