தூத்துக்குடி டிலைட் பப்ளிக் பள்ளியில் நாட்டின் 80 வது சுதந்திர தின விழா !

தூத்துக்குடி டிலைட் பப்ளிக் பள்ளியில் நாட்டின் 80 வது  சுதந்திர தின விழா !

தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு, டிலைட் பப்ளிக் பள்ளியில் சுதந்திர தின விழா  கொண்டாடப்பட்டது.

பள்ளி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியைகள், பள்ளி நிர்வாகத்தினர், முன்னிலையில் பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி தேசிய கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார்.

அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.  சுதந்திர தின விழாவில் மாணவர்கள் தேசபக்திப் பாடல்கள் பாடுதல், உரை நிகழ்த்துதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாணவி ருசித்தா பால் “மனதில் எழும் கேள்வி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களை சித்திரிக்கும் பாத்திரமேற்று நடித்தல் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் பிரபாகரன் ஜான் பரிசுகளை வழங்கினார். பள்ளித் தலைவர் ஜெயசீலன், பள்ளி டிரஸ்ட் செயலாளர் மெர்லின் பிரமிளா ஆகியோர் சுதந்திர தின வாழ்த்துகளை பகிர்ந்தனர்.