தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 80 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் !

இன்று தூத்துக்குடி நகர்ப்புறம் வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 80 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது. மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. விழாவில் தலைமை ஆசிரியை கொடியேற்றி வைத்து சுதந்திரத்தின் வரலாறு சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றி சிறப்புரையாற்றினார்.

தற்காப்பு கலை பயிற்றுனர் ஜாபர் உசேன் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர் நவநீதகிருஷ்ணன், SMC தலைவர் சோனியா, உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் சிறப்புரை ஆற்றினர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரிமா சங்கத்தின் மூலம் 10 பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை மற்றும் ஐந்து மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

பள்ளியின் பட்டதாரி ஆசிரியை ஜாய்சி நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் ஜெரோலின், ஹெர்மினா, அமுதா, அக்ஸிலியா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.













