தூத்துக்குடி மாவட்டம் முக்காணி கிராம சபை கூட்டத்தில் புனித மரியன்னை கல்லூரி பங்கேற்பு !
தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில் சுதந்திர தினத்தில் இன்று தூத்துக்குடி மாவட்டம் முக்காணி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வணிகவியல் துறை(சுயநிதிக் பாடப்பிரிவு)இரண்டாம் ஆண்டு மாணவிகள் பதினைந்து பேர்களோடு கலந்து கொண்டு கல்லூரியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் மக்களின் தேவைகள்(சாலை வசதி,தண்ணீர் வசதி) முதலியவற்றை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி முக்காணி ஊராட்சி செயலாளர் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர். அருட்சகோதரி சிபானா,செயலர் முனைவர். அருட்சகோதரி குழந்தை தெரஸ்,துணை முதல்வர் முனைவர். அருட்சகோதரி எழிலரசி,சுயநிதிக் பிரிவு இயக்குனர் முனைவர்.அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் ஆல்போன்ஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான்(UBA) ஒருங்கிணைப்பாளர் முனைவர்.புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
வணிகவியல் துறை பேராசிரியர் ரோஷினி வழி நடத்தினார்.












