கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிதியியல் கல்வியறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது !
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிதியியல் கல்வியறிவு மன்றம் மற்றும் நாட்டுநலப் பணித்திட்ட அணி எண் 132 இணைந்து, கிருஷ்ணா அறக்கட்டளை, மும்பை ஒத்துழைப்புடன் நிதியியல் கல்வியறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சியை 13.08.2026 அன்று அன்று கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மும்பையை சேர்ந்த தியா நவின் பஞ்சாபி, இந்திய பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் நிதியியல் விழிப்புணர்வு பயிற்றுநர், இணையவழியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நிதியியல் கல்வியறிவின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில், நிதி மேலாண்மை, சேமிப்பின் அவசியம், வரவு–செலவு திட்டமிடுதல், பொறுப்பான பணப் பயன்பாடு, பாதுகாப்பான முதலீட்டு முறைகள் மற்றும் எதிர்கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
மேலும், இணையவழி மற்றும் மின்னணு நிதிப் பரிவர்த்தனைகளின் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், நிதி மோசடிகளை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர், நிதியியல் கல்வியறிவு மன்றம், நாட்டுநலப் பணித்திட்ட அணி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொண்டனர்.












