10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியிடப்பட்டது !

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியிடப்பட்டது!

அரசு தேர்​வு​கள் இயக்​குநர் சசிகலா வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்பு!

கடந்த மார்ச், ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்​வில் விடைத்​தாள் நகல் பெற்ற தேர்​வர்​கள் மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீடு செய்ய விண்​ணப்​பிக்க ஜூன் மாதம் வாய்ப்பு அளிக்​கப்​பட்​டது.

விடைத்​தாள் மறும​திப்​பீடு மற்​றும் மறுகூட்​டல் செய்​யும் பணி ஜூன் 25-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி முடிவடைந்​தது. தற்​போது மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீடு கோரி விண்​ணப்​பித்​தவர்​களில் மதிப்​பெண் மாற்​றம் உள்ள தேர்​வர்​களின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியல் அரசு தேர்​வுத் துறை​யின் இணை​யதளத்​தில் (www.dge.tn.gov.in) இன்று (ஜூலை 6) பிற்​பகல் வெளி​யிடப்​பட்டது.

விடைத்தாள் நகல் பெற்று விண்ணப்பித்த 8,682 தேர்வர்கள் தங்கள் திருத்தப்பட்ட மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மொத்த விண்ணப்பங்கள்:

மறுகூட்டலுக்கு 751 பேரும், மறுமதிப்பீட்டிற்கு 7,931 பேரும்‌ விண்ணப்பித்துள்ளனர்.

முடிவுகளைப் பார்ப்பது எப்படி:

தேர்வர்கள் மேற்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வாயிலாக தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளைக் காணலாம்.