தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான போட்டிகள் : மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்!

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான போட்டிகள் :
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்!

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 07.08.2026 அன்று மேனாள் மாணவியர் அமைப்பின் சார்பில் மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான மகா கலை இலக்கிய மற்றும் வினாடி – வினாப்போட்டிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர்.சங்கீதா சின்னராணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கிடையே உரையாற்றினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர். பழநி வாழ்த்துரை வழங்கினார். மேனாள் மாணவியர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறைத்தலைவருமான முனைவர்.கோகிலா சுபத்ரா கிறிஸ்டி வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் 20 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 218க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர் .பரத நாட்டியம், கிராமிய நடனம், ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, மகா வினாடி – வினாப்போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் முதல்பரிசிற்கான சூழற்கோப்பையினை அழகர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் தட்டிச் சென்றனர்.இரண்டாம் பரிசிற்கான சூழற்கோப்பையினை சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவியர் பெற்றனர்.
ஓவியப்போட்டியில் 18 மாணவியரும், மாதிரி தயாரித்தல் போட்டியில் 10 மாணவிகளும், வினாடி வினாப்போட்டிகளில் 10 பள்ளிகளிலிருந்து மாணவிகள் கலந்து கொண்டனர். பரத நாட்டியப் போட்டியில் 11 பேரும், நாட்டுப்புற நடனத்தில 18 பேரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர்.நீதா நன்றியுரை வழங்கினார். போட்டிகளில் மேனாாள் பேராசிரியப் பெருமக்கள் முனைவர்.சீதாலட்சுமி, முனைவர்.சங்கரி, முனைவர்.பானுமதி, முனைவர்.வனிதா நடுவராக பங்காற்றினர்.