தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சர்வதேச வணிகவியல் தினம் 2026 – CITE ’26 நிகழ்ச்சி நடைபெற்றது!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சர்வதேச வணிகவியல் தினம் 2026 – CITE ’26 நிகழ்ச்சி நடைபெற்றது!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில், சர்வதேச வணிகவியல் தினம் 2026 – CITE’26 நிகழ்வின் ஒரு பகுதியாக, “புதுமை, வர்த்தகம் மற்றும் தொழில்முனைவைக் கொண்டாடுதல்” என்ற கருப்பொருளில் நிகழ்ச்சி (7.8.2026) நடைபெற்றது.

தூத்துக்குடி Young Indians அமைப்பின் தலைவர் பிரேம் பால் நாயகம் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் தற்போதைய வணிகச் சூழல் குறித்து மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, புதுமை, தொழில்முனைவு, வர்த்தகம், தலைமைத்துவம் மற்றும் வணிக உலகில் உருவாகி வரும் புதிய வாய்ப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

பிற்பகல் அமர்வில் பள்ளி மாணவர்களுக்காக சுவரொட்டி விளக்கக்காட்சி (Poster Presentation), வணிகவியல் உரை (Commerce Talk), விளம்பரப் போட்டி (Adzap) ஆகிய பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகள் மாணவர்கள் தங்களது படைப்பாற்றல், தொடர்புத்திறன், வணிக அறிவு, விளக்கத்திறன் மற்றும் புதுமையான சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கின.

இப்போட்டிகளில் 6 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 42 மாணவர்கள்,10 ஆசிரியர்களுடன் கலந்து கொண்டனர். மாணவர்களின் ஆர்வமிக்க பங்கேற்பும், அவர்களுடன் வந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு பெரிதும் துணை புரிந்தன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும், பங்கேற்ற அனைத்து மாணவர்களும் கல்லூரி முதல்வர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டு ஊக்கப்படுத்தினார்..

இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த வணிகவியல் துறையின் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர்.பால் ராஜ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான உதவிப் பேராசிரியர் முனைவர்.ஜூப்ளின் பிரசன்னா மற்றும் துறையின் பிற பேராசிரியர்களால் நிகழ்ச்சி நடைபெற்றது.