தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி விலங்கியல் துறை மாணவர்கள் தென்காசி பட்டுப்புழு வளர்ப்பு மையத்திற்கு கல்விச் சுற்றுலா:

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி விலங்கியல் துறை மாணவர்கள் தென்காசி பட்டுப்புழு வளர்ப்பு மையத்திற்கு கல்விச் சுற்றுலா:

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் விலங்கியல் துறையின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில், பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, விலங்கியல் பயிலும் 36 மாணவர்களுக்காக, 07.08.2026 அன்று தென்காசி, நானகரத்தில் அமைந்துள்ள பட்டுப்புழு வளர்ப்பு மையத்திற்கு கல்விச் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுற்றுப்பயணத்தின் போது, திருமதி. செல்வி, உதவி இயக்குநர், உமா, இளநிலை கண்காணிப்பாளர்,ஜெயபிரபா, உதவி ஆய்வாளர்,மயில்ராஜா, இளநிலை ஆய்வாளர் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டுப்புழு வளர்ப்பின் பல்வேறு நடைமுறை அம்சங்கள் குறித்து நேரடி விளக்கமும் பயிற்சியும் வழங்கினர்.

இதில் பட்டுப்புழு முட்டை உற்பத்தி மற்றும் பராமரிப்பு (Grainage), பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, பட்டுக்கூடு உற்பத்தி மற்றும் பட்டு நூல் பிரித்தெடுக்கும் பிரிவுகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை மாணவர்கள் நேரடியாகக் கற்றறிந்தனர்.

மேலும், கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அனுபவமிக்க பட்டுப்புழு வளர்ப்பு விவசாயி ஒருவருடனும் மாணவர்கள் கலந்துரையாடினர். அவர் மல்பெரி சாகுபடி, பட்டுப்புழு பராமரிப்பு, பட்டுக்கூடு உற்பத்தி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பின் பொருளாதார வாய்ப்புகள் குறித்து தனது நடைமுறை அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்தக் கல்விச் சுற்றுப்பயணம் மாணவர்களுக்கு பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பட்டு உற்பத்தி தொடர்பான கோட்பாட்டு அறிவை, நடைமுறை அனுபவங்களுடன் இணைத்துப் புரிந்துகொள்ளும் சிறந்த வாய்ப்பை வழங்கியது. மேலும், பட்டு உற்பத்தி முறைகள் மற்றும் நிலையான கிராமப்புற வாழ்வாதார வாய்ப்புகள் குறித்த மாணவர்களின் புரிதலை மேம்படுத்துவதில் இச்சுற்றுப்பயணம் பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது.

இந்தக் கல்விப்பயணத்தில் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர். பார்த்திபன் மற்றும் முனைவர். கிருஷ்ணபிரியா, மேலும் விலங்கியல் துறையைச் சேர்ந்த சந்தன ராஜ் ஆகியோர் மாணவர்களுடன் கலந்து கொண்டனர்.