கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விக்ஷித் பாரத் யுவா கனெக்ட் – நஷமுக்த் பாரத் போதையில்லா இந்தியாவை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி !

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அணி எண் 7 சார்பாக “போதைப்பொருள் இல்லா இந்தியாவிற்கான இளைஞர்கள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகத்தின் மண்டல நாட்டு நலப் பணித்திட்ட இயக்ககம் சென்னை மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் நோக்கம் போதைப்பொருள் இல்லாத வளர்ச்சி அடைந்த இந்தியாவை 2047க்குள் உருவாக்குவதும் விக்க்ஷித் பாரத் 2047 என்ற இந்தியாவின் கனவை நனவாக்குவதில் மாணவர்களின் பங்கை ஊக்குவிப்பதுமாகும்.
தொடர்ந்து இளைஞர்களை சமூகத்தில் பொறுப்புணர்வுமிக்கவர்களாக இருக்க ஊக்குவிக்கும் இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த விக்க்ஷித் குறும்படம் திரையிடப்பட்டது நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ஜெயா (மு .கூ. பொ) தலைமை தாங்கி போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க நாட்டு நலப் பணித்திட்ட தன்னார்வலர்கள் பாடுபட வேண்டும் என தலைமை உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

ஆங்கிலத்துறை தலைவர் முனைவர். ராம்சங்கர் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர்.பால் மகேஷ் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார்.
கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.வெளியப்பன் விக்ஷித் பாரத் 2047 என்ற இந்தியாவின் இலக்கை எட்ட நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மை பாரத் பதிவுகள் குறித்தும் விக்க்ஷித் பாரத் உறுதி மொழியையும் மாவட்ட இளைஞர் அலுவலகம் மை பாரத் கேந்திரா சார்பாக சிறப்பாக நடத்தி விளக்க உரையாற்றினர். இளையோர் பாராளுமன்றத்தில் பங்கு பெற்ற மாணவி வைஷாலி விக்க்ஷித் பாரத் 2047 இலக்கை அடைய இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

நிகழ்ச்சியில் அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் என திரளாக கலந்து கொண்டு விக்க்ஷித் பாரத் 2047 என்ற இந்தியாவின் கனவை நினைவாக்குவது குறித்தும் போதைப் பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவது குறித்து விழிப்புணர்வு பயன் பெற்றனர்.
பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு இந்திய அரசின் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது இந்த நிகழ்வை தமிழ் துறை மாணவி ஜெயமாரி தொகுத்து வழங்கினார் நிகழ்ச்சியில் இறுதியாக தமிழ் துறைத்தலைவர் முனைவர்.மாரியம்மாள் அனைவருக்கும் நன்றி கூறினார். இக்கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை கணிதவியல் துறையை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகளுடன் இணைந்து திட்ட அலுவலர் முனைவர்.பால் மகேஷ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து ஒருங்கிணைப்பும் செய்திருந்தார்.













