கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று சாதனை !

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று சாதனை !

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 33-வது பட்டமளிப்பு விழா 28.07.2026 அன்று நடைபெற்றது. இதில் உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை மாணவி சுபித்ரா பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றார்.

மாணவிக்கு தமிழ் நாடு ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தருமாகிய மேதகு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தங்கப் பதக்கத்தினை வழங்கினார்.

தங்கப்பதக்கம் பெற்றுள்ள மாணவியினை கல்லூரியின் தாளாளர் விஜயன் முதல்வர் பிரபு பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பாராட்டினர்.