தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மற்றும் தக்ஷின் பாரத் கேட்வே பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிப்பு !
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரிக்கும் தூத்துக்குடி, வ.உ.சி. துறைமுகத்தில் செயல்பட்டு வரும் தக்ஷின் பாரத் கேட்வே பிரைவேட் லிமிடெட் (DBGT) நிறுவனத்திற்கும் இடையே, பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புடன் நடத்தப்படும் “Logistics and Container Terminal Management” திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கச் சான்றிதழ் பாடநெறிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புதுப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வு 24.07.2026 அன்று DBGT அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், வ.உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு மற்றும் DBGT நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செந்தில்குமார் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மேலும், DBGT நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான,
மனேக்ஷா ரூஃபஸ் – தலைமை செயல்பாட்டு அலுவலர் (Chief Operations Officer),
ஜெரோம் அருள்ராஜ் – மனிதவள, தொழிலாளர் உறவுகள் மற்றும் நிர்வாகத் தலைவர் (Head – HR, IR & Admin)
லக்ஷ்மணன் லிங்கம் – பாதுகாப்புத் துறைத் தலைவர் (Head – Safety),
அஷ்வின் பத்மநாபா – தகவல் தொழில்நுட்பத் தலைவர் (Head – Information Technology)
மற்றும் நிறுவனத்தின் மூத்த மேலாளர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் மூலம் 106 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். தொழில்–கல்வி நிறுவன ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்த முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் DBGT நிறுவன நிர்வாகத்திற்கு கல்லூரி சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.













