தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருபெரும் விழா கொண்டாட்டம்!
தூத்துக்குடி தஸ் நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரு பெரும் விழாவாக வனமககோத்சவம் மற்றும் உலக மக்கள் தொகை தின மானது கொண்டாடப்பட்டது .

விழாவானது தலைமை ஆசிரியர் அருள் சகோதரி சகாய ஹேமலதா ஜெயந்தி மற்றும் தாளாளர் அருள் சகோதரி சிறுமலர் தலைமையில் மிக நடைபெற்றது.

பதினோராம் வகுப்பு மாணவி கவி பிரியா உலக மக்கள் தொகை தினம் பற்றியும், ஒன்பதாம் வகுப்பு மாணவி மரிய மெல்பா வனமகோத்சவம் பற்றியும் சொற்பொழிவாற்றினார்கள்.

மாணவிகள்பல்வேறு போட்டியில் கலந்து கொண்டனர். பள்ளி இசைக்குயில் மாணவிகள் பாடல் பாடி சிறப்பித்தனர். மேலும் ஆசிரியை மெர்லின் எழுதிய புத்தகத்தை அருள் சகோதரர் ரோஷன்,தலைமை ஆசிரியை சகாய ஹேமலதா ஜெயந்தி முன்னிலையில் வெளியிட்டார்.













