இந்தியா டுடே கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல்: தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு சிறந்த இடம்!

இந்தியா டுடே கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல்: தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரிக்கு சிறந்த இடம்!

இந்தியா டுடே ஆண்டு தோறும் கல்லூரிகளுக்கான தர வரிசையை கல்லூரியின் தரம், கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு, கட்டணம் மற்றும் உட்கட்டமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்து வெளியிடுகிறது.

அதுபோல் 2026 ம் ஆண்டிற்கான கல்லூரித் தர வரிசையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தனது 75 வது பவளவிழாவை கொண்டாடி வரும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சிறப்பான இடங்களைப் பெற்று தூத்துக்குடிக்கு பெருமை சேர்த்துள்ளது.

கலை (பி.ஏ) – 94வது இடம்
அறிவியல் (பி.எஸ்.சி) – 62வது இடம்
வாணிபம் (பி.காம்) – 127வது இடம்
தொழில் நிர்வாகம் (பி.பி.ஏ) – 120வது இடம்

இந்த சாதனை, நிர்வாகத்தினர் மற்றும் மதிப்பிற்குரிய செயலாளர் ஏ. பி. சி. வீ. சொக்கலிங்கம் அவர்களின் வழிகாட்டலால் நிகழ்ந்தது,

பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களின் நெஞ்சார்ந்த அர்ப்பணிப்பும், கல்வித் துறையில் ஒட்டுமொத்த தாராள மனப்பான்மையும் ஊக்கமும் ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.
இந்தியா டுடே தரவரிசை குழுவினரான பேராசிரியர் ஐயாதுரை, முனைவர். ஆவுடைச்செல்வி, முனைவர். செல்லபாண்டியன், முனைவர் ராஜ்குமார் மற்றும் முனைவர்.திரவியம், முனைவர் முத்துசாமி ஆகியோருக்கும் அவர்களின் திட்டமிட்ட முயற்சி மற்றும் தரவுகளை அழகாகத் தொகுத்து வழங்கியதற்காகவும் சிறப்பான பாராட்டுகளை கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு தெரிவித்தார்.