கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள் தர உ றுதிப் பிரிவு,நாட்டு நலப் பணித்திட்ட அணி எண்: 132 மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மன்றம் இ ணைந்து சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் – 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சியை 26.06.2026 அன்று காலை 10.00 மணிக்கு எ ல்.ஏ.பி.சி கல்லூரியின் கலையரங்கில் நடத்தினர்.

“நஷா முக்த் பாரத் அபியான் – விக்சித் பாரத் கிபெஹ்சான்” என்ற கருப் பொருளை மையமாகக் கொண்டு நடை பெற்ற இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார்.

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் “நஷா முக்த் பாரத் அபியான்” இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த செசிலின் வினோத், கலந்து கொண்டு, போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள், மாணவர்களின் சமூகப் பொறுப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் போதை இல்லா இந்தியா உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும், போதைப் பொருள் இல்லாத வளாகத்தையும், ஆரோக்கியமான சமூகத்தையும் உருவாக்க அனைவரும் உறுதியேற்றனர்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வத் தொண்டர்கள், போதைப் பொருள் ஒழிப்பு மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.