மே 20 ம் தேதி “10ம் வகுப்பு” பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு! தேர்வுத்துறை அறிவிப்பு!

மே 20 ம் தேதி “10ம் வகுப்பு” பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
தேர்வுத்துறை அறிவிப்பு!

வரும் 20 ம் தேதி புதன்கிழமை “10 ம் வகுப்பு” பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

9,09,002 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 20 ம் தேதி புதன்கிழமை வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 11 ம் தேதி புதன்கிழமை தொடங்கி ஏப்ரல் மாதம் 6 ம் தேதி திங்கட்கிழமை வரை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 9,09,002 மாணவ – மாணவியர்கள் தேர்வை எழுதினர் .தூத்துக்குடி மாவட்டத்தில் 22,196 மாணவ – மாணவியர்கள் எழுதினர்.

இதற்காக தமிழக முழுவதும் 4,219 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 9,09002 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர்.இதில் 12,467 பள்ளிகளில் இருந்து 8,82,806 மாணவ – மாணவிகளும் ,தனித் தேர்வர்கள் 26,196 பேரும் உள்ளடங்குவர். மேலும் 395 சிறைவாசிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் – 89 , அரசு உதவி பெறும் பள்ளிகள் 126 மற்றும் மெட்ரிக் பள்ளிகள் – 85 என மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 300 பள்ளிகளில் இருந்து 22,196 மாணவ – மாணவியர்கள் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருக்கின்றனர்.

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 20-ஆம் தேதி புதன்கிழமை காலை 9:30 மணிக்கு வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை Tnresults அல்லது Dge TN ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

தேர்வு முடிவுகளைப் பார்க்க Tnresults அல்லது Dge TN அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.முகப்புப் பக்கத்தில் உள்ள SSLC Class 10th Result என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.உங்கள் Registration Number (பதிவு எண்) மற்றும் பிறந்த தேதியை சரியாக உள்ளிடவும்.Submit அல்லது Get Marks பொத்தானை அழுத்தினால் உங்கள் மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும்.

20 ம் தேதி வெளியாகும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற “கல்விச் செய்திகள்” வாழ்த்துகிறது.