“பள்ளிகள் ஆன்லைன்” வகுப்புகள் ( Online Class) நடத்த வேண்டும் :
பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
“பள்ளிகள் ஆன்லைன்” – Online Class – வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், உலக கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உலக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இந்நிலையில், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மீண்டும் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். குஜராத்தின் வதோதராவில் உள்ள சர்தார்தாம் விடுதியின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் இறக்குமதிகளில் பெரும் பங்கு கச்சா எண்ணெயிலிருந்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, உலகின் பெரும்பகுதிக்கு எண்ணெய் வழங்கும் அதே பிராந்தியம், தற்போது மோதல் மற்றும் நிலையற்ற தன்மை நிறைந்த ஒரு சூழ்நிலையில் சிக்கியுள்ளது. எனவே, நிலைமைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை, தேசத்தின் பரந்த நலனுக்காக நாம் அனைவரும் நமது அன்றாட வாழ்வில் சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பள்ளிகள் இணைய ஆன்லைன் வகுப்புகள் (Online Class) வழியில் மாணவர்களுக்கான கற்பித்தலை தொடங்க வேண்டும். கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) முறையை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்க வேண்டும்” என்று பிரதமர் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












