தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பூமி தினம், உலக பாரம்பரிய தினம் மற்றும் சர்வதேச உயிர் பன்மய தினம் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தலைமையாசிரியை அருள்சகோதரி சகாய ஹேமலதா ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் பத்தாம் வகுப்பு மாணவிகள் தங்கள் பிறந்தநாள் பரிசாக பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார்கள். மேலும் பதினோராம் வகுப்பு மாணவிகள் மரக்கன்றுகளை வழங்கினார்கள். அதன் பிறகு பதினோராம் . வகுப்பு மாணவி சில்வியா உலக பாரம்பரிய தினத்தைப் பற்றியும், ஒன்பதாம் வகுப்பு மாணவி அர்ச்சனா உலக பூமி தினம் பற்றியும், மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவி சிமினா சர்வதேச உயிர் பன்மை தினம் பற்றி சொற்பொழிவாற்றினார்கள்.

தலைமையாசிரியர் பசுமை படை நிகழ்ச்சியில் இந்த வருடம் முழுவதும் சொற்பொழிவாற்றிய மாணவியர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழையும் வழங்கினார். தலைமை ஆசிரியர் முப்பெரும் விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவிகளையும், ஆசிரியை சகாய ஆனந்தி விண்ணரசி – யையும் பாராட்டினார்.