12 ம் வகுப்பு பொதுத்தேர்வு :
Computer Science, Computer Application, Bio – Chemistry, political science, Statistics உட்பட இன்று 11 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது:
தூத்துக்குடி மாவட்டத்தில் 8,436 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 02.03.2026 முதல் தொடங்கி இன்று 26.03.2026 முடடிவடைந்தது.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற 11 பாடங்களுக்கான தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 9 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது.

இன்றைய தேர்விற்காக பள்ளியில் பயின்ற 8483 பேரும், தனித் தேர்வர்கள் 15 பேர் என மொத்தம் 8,498 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று 8,436 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் மாணவர்கள் 4,369 பேரும், மாணவிகள் 4,067 பேரும் உள்ளடங்குவர்.

இதில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 8,426 பேரும், தனித் தேர்வர்கள் 12 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இன்று 36 மாணவர்கள் மற்றும் 26 மாணவிகள் உள்பட 62 பேர் தேர்வினை எழுதவில்லை.

இன்று தூத்துக்குடி எஸ்.ஏ.வி.முல் நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சாமுவேல்புரம் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் 27 பேர் தேர்வு எழுதினார்கள்.












