தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மரம் நடும் விழா
தூத்துக்குடி: வ.உ.சிதம்பரம் கல்லூரி தூத்துக்குடி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) அணி எண் – 68 (பெண்கள் பிரிவு) சார்பில் சிறப்பு முகாம் நடவடிக்கையாக பல்வேறு சமூக சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதலில் புதுக்கோட்டை மங்களகிரி கிராமத்தில் உள்ள புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரநடுகை நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து பல மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் அருட்தந்தை மேட்ரிக் ஆண்டனி விஜயன் மற்றும் அருட்தந்தை பாக்கிய பால் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.
மாலை நேரத்தில் புதுக்கோட்டை கிராமத்தில் NSS ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் NSS ஒருங்கிணைப்பாளர் வெள்ளையப்பன் மற்றும் டாக்டர் தேவ ராஜ் கலந்து கொண்டு NSS முகாம்களின் முக்கியத்துவம் மற்றும் சமூக சேவையில் மாணவர்களின் பங்கு குறித்து உரையாற்றினர். நிகழ்ச்சி மாணவி அருள் தேவி வரவேற்பு உரையுடன் தொடங்கி, காவியா நன்றியுரையுடன் நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சிகளில் NSS அணி – 68 மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகள் வ.உ.சிதம்பரம் கல்லூரி NSS திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் டாக்டர். ஆரோக்கிய செல்வ சுந்தரி, தலைமையில் நடத்தப்பட்டது.












