தென் மண்டல பல்கலைக்கழக கைப்பந்து போட்டிக்கு கோவில்பட்டி கே.ஆர்.கல்லூரி மாணவிகள் தேர்வு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணியின் தேர்வு 10-01-2025 அன்று அம்பை கலை கல்லூரியில் நடை பெற்றது.
தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கைப்பந்து (Hand Ball) போட்டியில் விளையாட கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணியில் தேர்வு பெற்றுள்ளனர்.
தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கைப்பந்து போட்டி கேரளா மாநிலத்திலுள்ள மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தில் 22-03-2026 முதல் 25-03-2026 ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது.

இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிலிருந்து பல்வேறு பல்கலைக்கழக அணிகள் விளையாடவுள்ளன.
இதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணியில் விளையாடுவதற்கு கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் அஸ்வினி, ரூபிகா, காமாட்சி மற்றும் மதுமிதா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கைப்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவிகளை கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பாராட்டினார்கள்.












