தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சொற்பொழிவு
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஆலோசனை குழுமம் சார்பில் “ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுயநிறைவு – அடிப்படை உரிமை” என்ற தலைப்பில் இன்று 09.03.2026 ,சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் பெண்களின் உண்மையான அதிகாரமடைதலுக்காக பெண்கள் கல்வி, நிதி அறிவு மற்றும் தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார். மேலும் இளம் பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, உயர்கல்வியை தொடர்ந்து கற்று, பொருளாதார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு தன்னிறைவு கொண்ட எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று ஊக்குவித்தார்.

இந்த நிகழ்ச்சி மாணவியர்களுக்கு பொருளாதார சுயநிறைவு முக்கியத்துவம் மற்றும் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இளநிலை முதலாம் ஆண்டு மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பேச்சாளருடன் கலந்துரையாடினர்.
மேலும், மகளிர் தினத்தை முன்னிட்டு முன்னதாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்கள் ஆலோசனை குழுமத்தினர் நிகழ்ச்சியை சிறப்பாக செய்தனர்.













