நூற்றாண்டுகளை ( 03 – 11 – 1926 – 2026 ) கடந்தது தூத்துக்குடி மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி : களை கட்டும் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள்

நூற்றாண்டுகளை ( 03 – 11 – 1926 – 2026 ) கடந்தது தூத்துக்குடி மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி :
களை கட்டும் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள்

தூத்துக்குடி மாநகரில் கடந்த நூற்றாண்டில்  நவம்பர் 3 ம் தேதி 1926 ஆம் ஆண்டு மேலூரில் ஆரம்பிக்கப்பட்டது இப்பள்ளி. சிறு விதையில் உருவான இப்பள்ளி இன்று 267 மாணவர்கள், 278 மாணவிகள் ஆக மொத்தம் 545 மாணவ மாணவியர்கள் பயின்று வரும் ஆலமரமாக வேரூன்றி கல்வியை அனைவருக்கும் பயன்பெறும் நிழலாக வழங்கி வருகிறது .

1926 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி இன்று தனது நூற்றாண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதற்கான விழா இன்று (07.03.2026,சனிக்கிழமை) மதியம் 2.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா இ.ஆ.ப. நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கின்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி,மாவட்ட கல்வி ( தொடக்க கல்வி ) அலுவலர் தட்சிணாமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் தூத்துக்குடி என்டிபிஎல், சி இ ஓ அனந்த ராமானுஜம் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சிக்கு வரவேற்பை வழங்குகிறார்கள் அந்தோணி மைக்கேல் (பட்டதாரி ஆசிரியர் ), நூற்றாண்டு உறுதி மொழியை முன்னாள் மாணவர்கள் மற்றும் எஸ் எம் சி உறுப்பினர்கள் எடுக்கின்றனர்.

நூற்றாண்டு அறிக்கையை பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமா ஆனந்தி வாசிக்கிறார்.

வாழ்த்துரை வழங்க வருகிறார்கள் முதுநிலை விரிவுரையாளர் டயட் ( DIET)வானரமுட்டி தனலட்சுமி ,வட்டார வள மையம் மேற்பார்வையாளர் பார்வதி ,ஆசிரியர் பயிற்றுநர் வனிதா ,லயன்ஸ் கிளப் தலைவர் சசிகுமார், முன்னாள் ஆசிரியர் லூடஸ் ராஜம் பிரீடா,பள்ளிக்கணக்காளர்கள் வேல் முருகன் , மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியை ஆப்பிள் ஜெயா ஆகியோர்கள் வழங்குகிறார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமா ஆனந்தி தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் செய்துள்ளனர்.

முன்னதாக நூற்றாண்டு சுடர் ஏற்றி விழா ஆரம்பமானது.

விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக அறிவியல் ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணியிடம் பள்ளி மாணவர்களின் பயனுக்காக ஒப்படைத்தார் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி.

பின்னர் மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, என்டிபிஎல் சிஇஓ அனந்த ராமானுஜம் மற்றும் பள்ளி மாணவர்கள் சேர்ந்து குத்து விளக்கேற்றினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் முக்கிய விருந்தினர்களை வரவேற்க கண்ணைக் கவரும் உடையில் தேவதைகளாக உருவெடுத்திருந்தனர் பள்ளி மாணவச் செல்வங்கள்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் ஆடல்,பாடல், சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

பள்ளியின் சாதனைகள்:

பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளும், மாணவர்கள் பல்வேறு சாதனைகளுக்காக வாங்கிய விருதுகளும் ஒரு வகுப்பறையில் படர்த்தி வைக்கப்பட்டிருந்தது.

ஒரு மாணவி பள்ளி கரும்பலகையில் தனது ஓவியத் திறமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்.